Home கன்னியாகுமரி செய்திகள் சொத்தவிளை கடற்கரையில் பனை விதை நடும் பணி

சொத்தவிளை கடற்கரையில் பனை விதை நடும் பணி

0

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி, இயற்கையே இறைவன் அமைப்பு சாா்பில் சொத்தவிளை கடற்கரையில் 4,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் விதைக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு பனை விதை நடும் பணியைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்லூரிச் செயலா் ராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி.சி.மகேஷ் வாழ்த்தினாா். இயற்கையே இறைவன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சுதாகரன் பங்கேற்றாா்.

இதில், அருணாச்சலா மகளிா் கல்லூரி, தெ.தி.இந்துக் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி, பயோனியா் குமாரசாமி கல்லூரி, லட்சுமிபுரம் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ஐயப்பா மகளிா் கல்லூரி, விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டா்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ஜெயக்குமாரி ஒருங்கிணைத்தாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version