பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை 8 வண்ணங்களில் அடையாளப்படுத்தி கண்காணிப்பில் வைக்க திட்டம்

0
21

பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும், அத்​தகைய குற்​றங்​களில் ஈடு​படு​வோரை தீவிர​மாக கண்​காணிக்க தமிழக காவல்​துறை புதிய நடவடிக்​கையை அறி​முகப்​படுத்​தி​யுள்​ளது. அதன்​படி, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​படு​பவர்​களை அவர்​களின் குற்​றத்​தின் தன்மை மற்​றும் ஆபத்​தின் அடிப்​படை​யில் 8 வண்​ணங்​களாக பிரித்து கண்​காணிக்​கும் நடை​முறை அறி​முகப்​படுத்​தப்பட உள்​ளது.

பொது​வாக கொடூர ரவுடிகள், கொலை​யாளி​கள், கூலிப்​படை​யினர் மற்​றும் அடிதடி வழக்​கு​களில் தொடர்​புடைய ரவுடிகளை போலீ​ஸார் ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 பிரிவு​களாக வகைப்​படுத்தி தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர். அவர்​கள் சிறை​யில் இருந்​தா​லும், ஜாமீனில் வெளியே இருந்​தா​லும் அல்​லது திருந்தி வாழ்ந்​தா​லும் காவல்​துறை​யின் கண்​காணிப்​பில் இருப்​பார்​கள்.

அதே​போன்​று, பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​படு​வோரை தனித்​தனி வண்​ணங்​களின் அடிப்​படை​யில் வகைப்​படுத்​தி, கண்​காணிப்​பில் வைக்க போலீ​ஸார் முடிவு செய்​துள்​ளனர்.

8 வண்​ணங்​கள்

சிவப்​பு: கூட்டு பாலியல் வன்​கொடுமை மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான மிகக் கடுமை​யான பாலியல் குற்​றங்​களில் ஈடு​பட்​ட​வர்​கள்.

ஆரஞ்​சு: பெண்​களை தொடர்ந்து பின்​தொடர்​தல், பாலியல் தொல்லை அளித்​தல். சிறார்​களுக்கு எதி​ரான குற்​றங்​களை மீண்​டும் மீண்​டும் செய்​வோர்.

நீலம்: இணை​ய​வழி மற்​றும் டிஜிட்​டல் தளங்​கள் மூலம் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​படு​பவர்​கள்.

ஊதா: மூன்​றாம் பாலினத்​தவர், டேட்​டிங் செயலிகள் மற்​றும் இணைய தளங்​களை பயன்​படுத்தி குற்​றச் செயல்​களில் ஈடு​படு​வோர்.

கருப்​பு: பெண்​கள், சிறார்​களை கடத்​தல் மற்​றும் பாலியல் குற்​றங்​களை அமைப்​பு​சார்ந்த முறை​யில் மேற்​கொள்​ளும் கும்​பல்​களை சேர்ந்​தவர்​கள்.

சில்​வர்: சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படும் அல்​லது குற்​றப்​பின்​னணி கொண்ட சிறார்​களை அடை​யாளம் கண்​டு, பெற்​றோர் மற்​றும் பாது​காவலர்​கள் மூலம் அவர்​களை நல்​வழிப்​படுத்​தும் நடை​முறை.

மஞ்​சள் மற்​றும் பச்​சை: குற்​ற​வாளி​களின் முந்​தைய குற்​றப் பதிவு​கள், அவர்​கள் சமூகத்​துக்கு ஏற்​படுத்​தக்​கூடிய அச்​சுறுத்​தல், ஆபத்​துகளின் மதிப்​பீடு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் அவர்​களின் அபாய நிலையை குறிக்​கும் வண்​ணங்​களாக இந்த இரண்டும் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

இந்த புதிய நடை​முறை​ மூலம் பெண்​களுக்​கு எதி​ரான குற்​றங்​களில்​ ஈடு​படு​பவர்​களை தொடர்​ந்​து கண்​​காணித்​து, அவர்​கள்​ மீண்​டும்​ குற்​றங்​களில்​ ஈடு​படு​வதைத்​ தடுக்​க ​காவல்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here