மின்வாரியத்துக்கு வழங்கிய நிலத்தை திரும்பப் பெறக் கோரிய மனு தள்ளுபடி

0
22

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள 15 கிர​வுண்ட் நிலம் தமிழக மின்​வாரி​யத்​துக்​காக கடந்த 1990-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது.

தற்​போது அதன் ஒரு பகு​தி​யில் மின்​கட்டண வசூல் மையம் செயல்​படு​கிறது. மீதி​யுள்ள காலி நிலத்தை திரும்​பப் பெறக் கோரி வழக்​கறிஞர் எம்​.டி.அருணன் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார்.

தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதம்: மனு​தா​ரர் தரப்​பு: வழக்​கறிஞர்​கள் தங்​கள் வாக​னங்​களை நிறுத்த முடி​யாத அளவுக்கு உயர் நீதி​மன்ற வளாகத்​தில் இடநெருக்​கடி நில​வு​கிறது.

இது​போன்ற காலி இடங்​களை மீட்​டு, வாகன நிறுத்​தம், நீதி​மன்​றக் கட்​டிடங்​கள் போன்ற உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்த வேண்​டும்.

அரசு தலைமை வழக்​கறிஞர் விஜய் நாராயண்: மனு​தா​ரர் குறிப்​பிடும் இடத்​தில் உயர் நீதி​மன்​றத்​துக்​கான துணை மின்​நிலை​யம் இயங்கி வரு​கிறது. இங்​கிருந்து உயர் நீதி​மன்​றம் மட்​டுமின்​றி, அரு​கில் உள்ள அரசு பொது மருத்​து​வ​மனை, துறை​முகம் போன்​றவற்​றுக்​கும் மின் விநி​யோகம் செய்​யப்​ படு​கிறது.

மேலும் கூடு​தலாக 5,500 கிலோ​வாட் திறன் கொண்ட துணை மின்​நிலை​யம் அமைக்க வேண்​டி​யுள்​ளது. பாது​காப்பு கருதி மின் மாற்​றிகள் இடையே காலி இடம் விடு​வது அவசி​யம். இவ்​வாறு வாதம் நடந்​தது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “உயர் நீதி​மன்ற வளாகத்​தில் நீதித் துறைக்​குத் தேவை​யான உள்​கட்​டமைப்பு வசதி​களை விரிவுபடுத்த வேண்​டும் என்​ப​தில் மாற்​றுக் கருத்து இல்​லை.

அதே நேரம், இந்த துணை மின்​நிலை​யத்தை மாற்​றி​னால் உயர் நீதி​மன்​றம் மட்​டுமின்றி பிற முக்​கிய பொது சேவை அமைப்​பு​களுக்​கான மின் விநி​யோக​மும் பாதிக்​கப்​படும்.

முக்​கிய பொது அமைப்​பு​களுக்கு தடை​யில்லா மின்​சா​ரம் வழங்​கு​வதும் உண்​மை​யான பொதுநல நோக்​கம்​தான்” என்று கூறி வழக்​கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here