Home தேசிய செய்திகள் அமெரிக்க கூலிப்படையை சேர்ந்த வான் டைக் சொந்த நாடு செல்ல அனுமதி: பிரதமர் மோடி மீது...

அமெரிக்க கூலிப்படையை சேர்ந்த வான் டைக் சொந்த நாடு செல்ல அனுமதி: பிரதமர் மோடி மீது காங். கடும் தாக்கு

0

தீ​விர​வாத சதி வழக்​கில் கைது செய்​யப்​பட்ட அமெரிக்க கூலிப்​படையைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக்​ தனது குடும்​பத்​தினரை சந்​திப்​ப​தற்​காக ஒரு மாதம் சொந்த நாடு செல்ல டெல்லி சிறப்பு நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

அமெரிக்​கா​வின் அழுத்​தத்​திற்கு மத்​திய அரசு அடிபணிந்​து​விட்​ட​தாகக் கூறி காங்​கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கடும் தாக்குதலைத் தொடுத்​துள்​ளது. கடந்த மார்ச் மாதம் மியான்​மர் கிளர்ச்​சிக் குழுக்​களுக்கு ஆயுதம் மற்​றும் டிரோன் போர்​முறை பயிற்சி அளித்​த​தாக ஆரோன் வான் டைக் தேசி​யப் புல​னாய்வு முகமை​யால் (என்​ஐஏ) கைது செய்​யப்​பட்​டார்.

டெல்லி சிறப்பு என்ஐஏ நீதி​மன்​றம், செப்​டம்​பர் 18 அன்று வான் டைக்​குக்கு சட்​டப்​படி​யான பிணை வழங்​கியதுடன், செப்​டம்​பர் 24 அன்று அவர் ஒரு மாதம் சொந்த நாடு செல்​ல​வும் அனு​மதி அளித்தது. இந்த விவ​காரத்​தில் மத்​திய அரசின் நடவடிக்​கை​யைக் கடுமை​யாக விமர்​சித்​துள்ள காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், அமெரிக்​கா​வின் அழுத்​தத்​திற்கு மத்​திய அரசு அடிபணிந்​து​விட்​ட​தாகக் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

“சமரசம் செய்​து​கொள்​ளும் பிரதமர் மீண்​டும் அதைச் செய்துள்ளார்” என்று எக்ஸ் தளத்​தில் ஜெய்​ராம் ரமேஷ் விமர்சித்ததுடன், வழக்​கில் சட்​ட​விரோத நடவடிக்​கைகள் (தடுப்​பு) சட்​டப் பிரிவு​கள் நீக்​கப்​பட்​டது ஏன் என்​றும், வெளி​நாட்​டினர் முறை​யான அனு​ம​தி​யின்றி இந்​தி​யா​வுக்​குள் நுழைந்து பயணிக்க எப்​படி அனு​ம​திக்​கப்​பட்​டனர் என்​றும் கேள்வி எழுப்​பி​னார்.

காங்​கிரஸ் தலை​வர் பவன் கேரா, “முறை​யான அனு​ம​தி​யின்றி மியான்மர் சென்று ஆயுதப் பயிற்சி அளித்த அமெரிக்க கூலிப்​படையை சேர்ந்​தவ​ரான வான் டைக் மட்​டும் சொந்த நாட்​டுக்​குச் செல்ல அனு​ம​திப்​பது எப்​படி” என்று கேள்வி எழுப்​பி​னார். மேலும், அமெரிக்​கா​விலிருந்து இந்​தி​யர்​கள் கைவிலங்​குடன் நாடு கடத்​தப்​படு​வதை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​னார்.

வெளி​நாட்​டுச் சட்​டப் பிரிவு​களின் கீழ் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தா​லும், தீவிர விசா​ரணை தொடர்​வ​தாக என்ஐஏ தெரி​வித்​துள்​ளது. இதற்​கிடையே, அமெரிக்​கத் தூதரக அழுத்​தத்​தாலேயே இந்​தத் தளர்​வு​கள் வழங்​கப்​பட்​ட​தாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்​டு​கின்​றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version