ராதாபுரம் தி இந்தியன் வேளாண்மை கல்லூரி 20 மாணவ மாணவிகள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு பயணம் செய்தனர். அவர்கள் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வர் ஜெயா ஜாஸ்மினை சந்தித்த மாணவர்கள், அங்கு உள்ள அனைத்து வகையான தாவரங்களை நேரில் பார்வையிட்டனர்.
பின்பு, அங்கு பணிபுரியும் ராஜ் பிரவீன் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்புகளையும், அங்கு உருவாக்கப்பட்ட தாவர வகைகளை பற்றிய விரிவான விளக்கம் அளித்தார். இங்கு அதிக மழைப்பொழிவு காணப்படும் நிலப்பரப்பினால், தமிழ்நாட்டின் கடைசித் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையமாக இது அமைந்துள்ளது. இங்கு ரப்பர் மரங்கள் மற்றும் கொக்கோ மரங்கள் பரவி உள்ளன. மேலும், பட்டை, லவங்கம், மிளகு போன்ற மசாலா வகைகளை விதையிலிருந்து வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.
அழகு சார்ந்த பூச்செடிகள் மற்றும் பலாப்பழ வகைகளும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தனியார் தொழில் நிறுவனங்களை விட, இந்த ஆராய்ச்சி நிலையத்தில் செடிகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் செடிகளையும், தாவர வகைகளையும் நேரில் கண்டு, அவற்றின் பயன்களையும், வளர்க்கும் முறைகளையும் பற்றிய தகவல்களை விரிவாக அறிந்துகொண்டனர்.