Home மாநில செய்திகள் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல்

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் சாலை மறியல்

0

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளின் பெற்றோர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரபணு மாற்றம் காரணமாக குழந்தைகளுக்கு முதுகுத் தண்டுவட தசைச் சிதைவு என்ற தீவிரமான மரபணு நோய் ஏற்படுகிறது.

இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தசைகள் மற்றும் நரம்புகள் படிப்படியாக வலுவிழக்கும். இதை குணப்படுத்தும் மருந்து அமெரிக்காவில் உள்ளதாகவும், அதன் மதிப்பு ரூ.16 கோடி எனவும் கூறப்படுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் சொந்த முயற்சி, தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் திரள்நிதி வாயி லாக ரூ.16 கோடி மருந்தை பெற முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் நேற்று சென்னை வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீஸார் சமா தானம் செய்து, அதிகாரிகளிடம் பேச அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் போராட் டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் கூறியதாவது: இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 வயதுக்குள் மருந்து செலுத்த வேண்டும். சிகிச்சைக்கு தாமதம் ஏற்பட்டால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அதி காரிகளிடம் கோரிக்கை வைத்த போது அரசால் மருந்தின் செலவை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.

சுகாதார அமைச்சர் அருண்ராஜை 3 மாதங்களாக சந்திக்க முயன்றோம். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இந்த நோய்க்கான மருந்து செலவுக்காக தனி நிதியத்தை அரசு உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version