Home மாநில செய்திகள் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆந்திரா நபர் போக்சோவில் கைது…

இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆந்திரா நபர் போக்சோவில் கைது…

0

இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆந்திர மாநில நபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

சென்னை எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த வாரம் 18-ந்தேதி குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த குழந்தையின் பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த 23-ந்தேதி குழந்தையை அழைத்து சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இது குறித்து மருத்துவர்கள் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் ( வயது 36) என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து ஆந்திர மாநில நபர் ரஞ்சித்தை இன்று அதிகாலை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், கடந்த 1 மாதத்திற்கு முன்பு தனது அண்ணனின் வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். அந்தவேளை அங்கு விளையாடுவதற்காக வந்த இரண்டரை வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் அளித்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version