இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷைலாஷ் (54) என்பவர், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி பிரிட்டோவிற்கு (35) 15 பவுன் தங்க நகைகளை கடனாகக் கொடுத்துள்ளார். நகைகளை பிரிட்டோ திருப்பித் தராததால், ஷைலாஷ் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில், பளுல் போலீசார் பிரிட்டோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
