Home கன்னியாகுமரி செய்திகள் பளுகல்: ரப்பர் சீட்டுகளை திருடிய தொழிலாளி கைது

பளுகல்: ரப்பர் சீட்டுகளை திருடிய தொழிலாளி கைது

0

பளுகல் அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (49). விவசாயி. இவர் தனது வீட்டுக்கு பின்புறம் ரப்பர் சீட்டுகளை காய வைத்திருந்தார். சம்பவ தினம் இரவு அங்கு சென்ற மர்ம நபர் சுமார் 19 கிலோ எடை உடைய ரப்பர் சீட்டுகளை திருடி சென்று விட்டார். இது குறித்து அசோக்குமார் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கு இடையே அசோக்குமாரின் பக்கத்து வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது, வாலிபர் ஒருவர் ரப்பர் சீட்டுகளை திருடியது பதிவாகி இருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ரப்பர் சீட்டுகளை திருடியதாக புலியூர்சாலை பகுதியை சேர்ந்த தொழிலாளி வில்லியம்ஸ் (39) என்பவரை நேற்று கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version