பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்திருந்தது. சவுத் ஷகீல் 57, காஸி கோரி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 434 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. சவுத் ஷகீல் 93, காஸி கோரி 48, அராஃபத் மின்ஹாஸ் 52, ரசூல்லா 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 27.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது.
லகிரு உதரா 42, பசிந்து சூரியபண்டாரா 0, தினேஷ் சந்திமால் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். கமிந்து மெண்டிஸ் 40, தனஞ் ஜெயா டி சில்வா 22 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் உள்ள நிலையில் 320 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது இலங்கை அணி.














