இந்தியா ‘ஏ’ – நியூஸி. ‘ஏ’ கடைசி டெஸ்ட் போட்டி டிரா

0
9

இந்தியா ‘ஏ’ – நியூஸிலாந்து ‘ஏ’ அணிகள் இடை​யி​லான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி லிங்​கன் நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 464 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 102, சாய் சுதர்​சன் 88, துருவ் ஜுரெல் 71, திலக் வர்மா 81, வாஷிங்​டன் சுந்​தர் 50 ரன்​கள் விளாசினர்.

இதையடுத்து விளை​யாடிய நியூஸிலாந்து ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 14 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 36 ரன்​கள் எடுத்​திருந்​தது.

3-வது நாள் ஆட்​டம் மழை காரண​மாக முழு​மையாக ரத்து செய்​யப்​பட்​டிருந்த நிலை​யில் நேற்​றைய கடைசி நாள் ஆட்​டமும் மழை மற்​றும் மைதான ஈரப்​ப​தம் காரணமாக நடை​பெற வில்லை. இத​னால் இந்த போட்டி டிராவில் முடிவடைந்​த​தாக அறி​விக்​கப்​பட்​டது. இரு அணிகள் இடை​யி​லான 3 ஆட்​டங்​களும் டிரா ஆனதால் இரு அணிகளுமே கவுரவிக்கப்பட்டன.

நியூலிலாந்​துக்கு எதிராக நடை​பெற உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகை​யில் இந்த ஆட்​டத்​தில் ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் சேர்க்​கப்​பட்​டிருந்​தனர். ஆனால் 2 நாட்​கள் ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தானது இந்​திய வீரர்​களை ஏமாற்றம் அடையச் செய்​தது. இந்​தியா – நியூஸிலாந்து அணிகள் இடை​யி​லான 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் வரும் 19-ம் தேதி வெலிங்​டனில் தொடங்​கு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here