மணவாளக்குறிச்சியில் பைக் மோதி முதியவர் பலி

0
353

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி தெரு கலைஞர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன் (74). கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் மணவாளக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். பின் அங்கிருந்து வெளியே வந்தார். அப்போது மணவாளக்குறிச்சி பாலத்திலிருந்து சந்திப்பு நோக்கி வேகமாக சென்ற பைக் ஐயப்பன் மீது மோதியது. இதில்  ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஐயப்பன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மகன் சுதாகர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் பைக்கை ஓட்டி வந்த கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்த சகாய தினேஷ்(32) மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here