Home விளையாட்டு செய்திகள் ODI WC 2027 | “சொந்த மண்ணில் நடை​பெறுவதால் அழுத்​தம் இல்லை” – சொல்கிறார் ரபாடா

ODI WC 2027 | “சொந்த மண்ணில் நடை​பெறுவதால் அழுத்​தம் இல்லை” – சொல்கிறார் ரபாடா

0

2027 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி சொந்த மண்​ணில் நடை​பெறு​வ​தால் எங்​களுக்கு எந்​த​வித அழுத்​த​மும் இல்லை என்று தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி​யின் வேகப்பந்து வீச்​சாளர் காகிசோ ரபாடா தெரி​வித்​துள்​ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி வரும் 2027-ல் தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​களில் நடை​பெறவுள்​ளது.

இந்​நிலை​யில் இந்த உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி குறித்து செய்​தி​யாளர்​களிடம் ரபாடா கூறிய​தாவது:

2003-ம் ஆண்​டுக்​குப் பிறகு உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி தென் ஆப்​பிரிக்​கா​வில் நடை​பெறவுள்​ளது. 24 ஆண்​டு​களுக்​குப் பிறகு போட்​டியை நடத்​து​வ​தில் எங்​களுக்கு பெரு​மை.

இந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி எங்​கள் சொந்த மண்​ணில் விளை​யாடு​வ​தால் எங்​களுக்கு எந்​த​வித கூடு​தல் அழுத்​த​மும் இருக்​காது என்று நான் நம்​பு​கிறேன்.

உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடருக்​காக நாங்​கள் ஆவலுடன் காத்​திருக்​கிறோம். சமீப கால​மாக டெஸ்ட், ஒரு​நாள் போட்​டி, சர்​வ​தேச டி20 போட்​டிகளில் எங்​கள் அணி சிறந்த செயல்​திறனை வெளிப்​படுத்​தி​யுள்​ளது. டெஸ்ட் சாம்​பியன்​ஷிப்பை நாங்​கள் வென்று சாதனை படைத்​தோம்.

கிரிக்​கெட் போட்​டி​யின் 3 வடிவங்​களி​லும் தென் ஆப்​பிரிக்க அணி வெளிப்​படுத்​திய சீரான சிறப்​பான ஆட்​டம் எங்​களுக்கு பெரிய நம்​பிக்​கையை அளித்​துள்​ளது.

குறிப்​பாக 2025-ல் லார்ட்ஸ் மைதானத்​தில் நடை​பெற்ற ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப் போட்​டி​யில் நாங்​கள் பெற்ற வெற்​றியே இதற்கு சான்​றாகும்.

எங்​களது சொந்த மண்​ணில் 2027 உலகக் கோப்பை நடை​பெறு​வது ஒரு​வித சுதந்​திர உணர்​வைத் தரு​கிறது. சொந்த மண்​ணில் விளை​யாடு​வ​தாலோ அல்​லது வெற்​றி​பெற வேண்​டும் என்ற கட்​டா​யத்​தாலோ ஏற்​படும் அழுத்​தத்தை நான் உணர​வில்​லை.

நாங்​கள் எங்​கள் சொந்த வீட்​டில் இருக்​கிறோம். எங்​கள் கோட்​டையைக் காக்​கப் போகிறோம் என்​பது போன்ற உணர்​வு​தான் எனக்கு ஏற்​படு​கிறது.

1992-ல் நடை​பெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் இங்​கிலாந்​துக்கு எதி​ராக மெல்​போர்ன் கிரிக்​கெட் மைதானத்​தில் பாகிஸ்​தான் ஜாம்​ப​வான் வாசிம் அக்​ரம் வெளிப்​படுத்​திய சிறப்​பான பந்​து​வீச்சு எனக்​குத் தொடர்ந்து உத்​வேகம் அளித்து வரு​கிறது.

அக்​ரமின் செயல்​பாடு, ஆட்​டத்​தின் போக்​கையே மாற்றி பாகிஸ்​தான் தனது முதல் உலகக் கோப்​பையை வெல்ல உதவியது. அதே​போல, 2027 உலகக் கோப்​பையைச் சொந்த மண்​ணில் நடத்​தும்​போது தென் ஆப்​பிரிக்கா​வுக்​காக ஆட்​டத்​தின் முடி​வைத் தீர்​மானிக்​கும் வகையி​லான சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்த நான் விரும்​பு​கிறேன். நான் ஒரு வேகப்​பந்து வீச்​சாளர் என்​ப​தால், பந்​து வீச்​சாளர்​கள் சார்ந்த ஒரு சிறந்த தருணத்​தையே விரும்​புகிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version