Home சினிமா செய்திகள் ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ்?

0

நயன்தாராவின் ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த நவம்பரில் வெளியானது. அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை முதல் திருமணம் வரையிலான விஷயங்கள் பற்றி நயன்தாரா கூறியுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ பயன்படுத்தப்பட்டு இருந்தது. தனது அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், அந்த ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சந்திரமுகி’ பட உரிமையை தற்போது வைத்துள்ள ஏபி பிலிம்ஸ், இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சில வீடியோக்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. அது சமூக வலைதளத்தில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version