நார்வே நாட்டில் உள்ள ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரும் உலக சாம்பியனுமான டி.குகேஷ், ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். 5 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டம் 144-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்நது நடைபெற்ற ஆர்மகெடான் சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், 1.5 புள்ளிகளை பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 32-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆர்மகெடான் சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று 1.5 புள்ளிகளை பெற்றார். உலகின் முதல் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார்.
இதில் கார்ல்சன் 38-வது நகர்த்தலின் போது தோல்வி அடைந்தார். 10 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் அலிரேசா ஃபிரோஸ்ஜா 3 புள்ளிளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ், பிரக்ஞானந்தா தலா 1.5 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளனர். வெஸ்லி சோ, வின்சென்ட் கீமர் ஆகியோர் தலா ஒரு புள்ளிகளை பெற்றனர். கார்ல்சன் இன்னும் புள்ளிக் கணக்கை தொடங்கவில்லை.















