Home உலக செய்திகள் வட கொரியா – சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை தொடக்கம்

வட கொரியா – சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை தொடக்கம்

0

சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே இன்று (மார்ச் 30) நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

ஏர் சைனா விமானத்தை, வட கொரியாவுக்கான சீனத் தூதர் வாங் யஜுன் மற்றும் பிற தூதர்கள் வரவேற்றதாக சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிலிருந்து வட கொரியாவுக்கான பயணிகள் ரயில் சேவை மார்ச் 12 அன்று மீண்டும் தொடங்கியது. 2020-ல் கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து வட கொரியாவிற்கான விமானங்களும், பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

வட கொரிய விமான நிறுவனமான ஏர் கொரியா, 2023-ல் பீஜிங் மற்றும் பியாங்யாங்கிற்க்கு இடையேயான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது. கரோனா பெருந்தொற்றின் போது வட கொரியா அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதித்திருந்தது, ஆனால் தற்போது கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியுள்ளது. சீனா, வட கொரியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், முக்கிய நட்பு நாடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version