மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
இந்நிலையில், நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியிருப்பதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்தப் பரிசு நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீனக் குழுவால் வழங்கப்படுகிறது, இது நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடையது அல்ல என்று கூறப்படுகிறது. இருப்பினும், நார்வேவில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது.