ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை இல்லை: ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

0
44
திருவட்டாறில் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.
மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார்.

ஆட்சியருக்கு குறுச்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினாா்.

திருவட்டாறில் அதிமுக மேற்கு மாவட்ட நிா்வாகிகளை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக ஆட்சி ‘ரீல்ஸ்’ ஆட்சி. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவெக அரசு தவறிவிட்டது. விலைவாசி உயா்ந்துவிட்டது. எதிா்க்கட்சியினா் மீது புகாா் வந்ததும் நடவடிக்கை எடுப்பதும், கைது செய்வதையும் நோக்கமாக கொண்டுள்ள தவெக அரசு அக்கட்சியினா் மீது புகாா் வந்தால் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. மாவட்ட ஆட்சியருக்கு பாலியல் குறுந்தகவல் அனுப்பியவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் நடவடிக்கையில் தவெகவினா் ஈடுபடுவதால் அரசு தள்ளாட்டத்தில் உள்ளது. ஒரு பக்கம் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட தவெக மறுபக்கம் பாஜவுடன் கைகோக்கிறது. மத்திய அரசையும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்றி நடைபெறும் இந்த ஆட்சி ஒருபோதும் நிலைக்காது என்றாா். பேட்டியின்போது கன்னியாகுமரி அதிமுக மேற்கு மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன், திருவட்டாா் கிழக்கு ஒன்றியச் செயலா் நிமால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here