நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் உள்ள புதர் மறைவில் மூன்று வாலிபர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகே சென்று பார்த்தபோது போதைப் பொருட்களை பயன்படுத்திக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து வாலிபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஆல்வின்றோ, ஜெபின் ராஜ், ஜெயின்ராஜ் ஆகியோர் என்பதும் கஞ்சாப் புகையிலையை பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேர் மீதும் நித்திரவிளை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.














