காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கொத்தனார் சஜி, திருமண ஆகாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி, வீட்டில் இருந்த தென்னை மாத்திரையை மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார். நண்பர்களால் மீட்கப்பட்டு குழித்துறை அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் ராஜம் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














