Home கன்னியாகுமரி செய்திகள் நித்திரவிளை: ஆம்புலன்ஸ் சேவை.. துவக்கி வைத்த எம் பி

நித்திரவிளை: ஆம்புலன்ஸ் சேவை.. துவக்கி வைத்த எம் பி

0

நித்திரவிளை  சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் போது, போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனை தடுக்க அந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு இலவச  ஆம்புலன்ஸ் சேவையை நேற்று மாலை நடைக்காவு பகுதியில்  துவங்கப்பட்டது.    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார்.
     நிகழ்ச்சியில் நடைக்காவு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஜின், தமிழக காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் உட்பட காங்கிரஸ்   நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version