Home தேசிய செய்திகள் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்...

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியீடு

0

தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் புதிய அறிவியல் இதழ்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.

மத்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் (சிஎஸ்ஐஆர்) 85-வது நிறுவன தினத்தையொட்டி, மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய அறிவியல் தகவல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட அறிவியல் இதழ்களை அறிமுகம் செய்து வைத்தார்.

​தமிழில் ‘அறிவியல் அறிக்கையாளர்’ என்ற பெயரிலும், தெலுங்கு மொழியில் ‘விக்ஞான் வெலுகு’ என்ற பெயரிலும், மராத்தி மொழியில் ‘விக்ஞான் க்‌ஷீதிஜ்’ என்ற பெயரிலும், அசாமி மொழியில் ‘பிக்யான் லஹர்’ என்ற பெயரிலும், பெங்காலி மொழியில் ‘பிக்யான் பிரித்தாந்தோ’ என்ற பெயரிலும் இந்த இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

​ஆங்கிலத்தில் சயின்ஸ் ரிப்போர்ட்டர் என்ற பெயரிலும், இந்தியில் விக்ஞான் பிரகதி என்ற பெயரிலும், உருது மொழியில் சயின்ஸ் கி துனியா என்ற பெயரிலும் இதழ்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரும் நிலையில், நீண்டகால அந்த மரபின் தொடர்ச்சியாக, இந்த புதிய இதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

​நம்பகமான அறிவியல் சார்ந்த அறிவை வாசகர்களுக்கு அவர்களது தாய்மொழிகளில் வழங்குவதையும், அந்தந்தப் பகுதிகளின் அறிவியல் ரீதியிலான சாதனைகள், கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துவதையும் இந்த இதழ்கள் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

​செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தகவல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு இவை வெளியிடப்படுகின்றன. அத்துடன் அந்தந்த மொழிகளில் எழுதப்படும் நேரடிக் கட்டுரைகளும் இதில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version