சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

0
21

சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘லவ் பைட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகனாக சந்தானம் நடிக்கவுள்ளார். இதனை ‘காஞ்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கவுள்ளார்.

இதில் சந்தானத்துடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. முழுக்க காமெடியை மையமாக வைத்து ஜாம்பி படமாக இது உருவாகிறது என்பது போஸ்டர் மூலம் தெரிகிறது. ஒரே கட்டமாக இதனை படமாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது சுதாமன் கிருஷ்ணா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். அதனை முடித்துவிட்டு ‘லவ் பைட்’ படத்தில் கவனம் செலுத்துவார் என தெரிகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here