வெள்ளிச்சந்தை அருகே நாகர்கோவிலில் கண்டக்டராக பணிபுரியும் பிரதீஷ் (33) என்பவர் ஸ்ரீனிவாசன் ஓட்டி வந்த பைக் மீது மோதி காயமடைந்தார். ராஜாக்கமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீஷின் விபத்து குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் ஸ்ரீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













