Home கன்னியாகுமரி செய்திகள் ரூ. 1.93 கோடியில் நவீனமாகும் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு

ரூ. 1.93 கோடியில் நவீனமாகும் நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம்: ஆட்சியா் ஆய்வு

0
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ.1.93 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகள் ஆய்வு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ரூ.1.93 கோடி மதிப்பிலான நவீனப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் ஆய்வு செய்தார்.

நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் ரூ. 1.93 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

இந்த விளையாட்டு அரங்கத்தில் ரூ. 38 லட்சம் மதிப்பில் பிரதான பாா்வையாளா் மேடை (கேலரி), முகப்பு தோற்றம் புதிதாக வடிவமைத்தல், நீச்சல் குளத்தைச் சுற்றி நடைமேடை உள்ளிட்ட பணிகளும், ரூ. 37 லட்சத்தில் வீராங்கனைகள் தங்கும் விடுதியில் கழிப்பறை, சமையலறை, கணிப்பொறி அறை கட்டுமானப் பணியும், ரூ. 33 லட்சத்தில் நீச்சல் குளத்தை புதுப்பிக்கும் பணியும், ரூ. 21 லட்சத்தில் தடகள வீரா்கள் பளு தூக்கும் பயிற்சிக் கூடத்தை புதுப்பிக்கும் பணியும் நடைபெறுகின்றன.

இதைப்போல உடற்பயிற்சிக் கூடத்தை நவீனப்படுத்துதல், கூடைப் பந்து மைதானத்தைப் புதுப்பித்தல் உள்பட மொத்தம் ரூ. 1.93 கோடி மதிப்பில் விளையாட்டரங்கத்தை நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட விளையாட்டு அலுவலா், ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.

விளையாட்டு அரங்கின் முன்புறமுள்ள மழைநீா் வடிகால்களை சீரமைக்கவும், விளையாட்டு அரங்கம் முன்புறம் உள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வில் மாவட்ட விளையாட்டு அலுவலா் வினு, உதவி செயற்பொறியாளா் வாலி, இளநிலை பொறியாளா் ஸ்டீபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version