பாகிஸ்தானின் கராச்சி நகர் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த 1947-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கராச்சி நகரில் 51.1 சதவீத இந்துக்கள் வசித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்கு மாறிய அந்த நகரில் தற்போது 1.12 சதவீத இந்துக்கள் மட்டுமே உள்ளனர். அங்கு 250 இந்து கோயில்கள் இருந்த நிலையில் தற்போது 50 கோயில்கள் மட்டுமே உள்ளன.
கராச்சியின் புறநகர்ப் பகுதியான கஸ்தராபாத் நகரில் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலை மராத்தியர்கள் நிர்வகித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைக்கு புதிதாக வண்ணம் தீட்டப்பட்டது. கராச்சியை சேர்ந்த பிரபல முஸ்லிம் ஓவியர், விநாயகர் சிலைக்கு வண்ணம் தீட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.















