Home கன்னியாகுமரி செய்திகள் முளங்குழி: கொத்தனாரின் அந்தரங்க பகுதியில் தாக்கு- வழக்கு

முளங்குழி: கொத்தனாரின் அந்தரங்க பகுதியில் தாக்கு- வழக்கு

0

முளங்குழி பகுதி நெல்வேலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாபு (53) கொத்தனார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்லசாமி மகன் அனிஷ். இவருக்குக் குடிப்பழக்கம் உண்டு. அனிஷ் அடிக்கடி குடித்துவிட்டு சாலையில் செல்லும் பலரையும் வம்புக்கு இழுத்து தகராறு செய்வது வழக்கம். 

நேற்று முன்தினம் (பிப்.24) இரவு சுமார் 7 மணி அளவில் அனிஷ் வழக்கம்போல் மது அருந்திவிட்டு பாபு வீட்டு முன் நின்றுகொண்டு அவதூறாகப் பேசி தகராறு செய்தார். இதனைப் பாபு தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த அனிஷ் திடீரென பாபுவின் அந்தரங்கப் பகுதியில் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பாபு கதறினார். உடனே அவரை மீட்டுக் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அனிஷ் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version