குமரி கிழக்கு மாவட்டம் தக்கலை தெற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் முளகுமூடு சந்திப்பில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சுந்தரசிங் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் எட்வின் முன்னிலை வகித்தார். கப்பியறை பென்னட் வரவேற்றார். மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், பேச்சாளர் பாலசுப்பிரமணியன், குளச்சல் தொகுதி பொறுப்பாளர் விஜயகதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். முளகுமூடு பேரூராட்சி தலைவர் அனுஷா ஆர் ஜோன், பேரூர் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.














