ஞானேஷ் குமாருக்கு எதிரான எம்.பி.க்கள் போராட்டம்: மதிய உணவுக் கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைப்பு

0
21

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றைய தினம் போல் இன்றும் மதிய உணவு கூட்டத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டை முன்னின்று நடத்தும் காங்கிரஸ், அக்டோபர் 8-ஆம் தேதியை ‘கருப்பு தினம்’ என அனுசரிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அக்டோபர் 7 தேதியிட்ட கடிதத்தில், “அக்டோபர் 8 அன்று மாநில, மாவட்ட மற்றும் வட்ட அளவில் பெரிய அளவிலான போராட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்,” என காங்கிரஸ் அமைப்புகளை பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி காவல்துறை தவறாக நடத்தியதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்காக, அக்டோபர் 8 அன்று தங்கள் மாநிலங்களில் ’கருப்பு தினம்’ அனுசரித்து போராட்டங்களை நடத்துமாறு காங்கிரஸ் தனது மாநிலப் பிரிவுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், அக்கட்சியின் தலைவர் கார்கே, எதிர்க்கட்சி எம்பிக்களை இன்றும் மதிய உணவு கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைத்துள்ளார். கன்னாட் பிளேஸில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வருமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

மதிய உணவிற்குப் பிறகு, எதிர்க்கட்சி எம்பிக்கள் ராகுல், பிரியங்காவுடன் மீண்டும் போராட்டத்திற்காகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நேற்று அழைத்தவர் திடீர் என முடிவு செய்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்றனர்.

நேற்று இரண்டாவது நாளாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், காங்கிரஸ் எம்பியான பிரியங்கா வாத்ரா உள்ளிட்டோர் கைதாகினர். ராகுலும், பிரியங்காவும் டெல்லி காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் வழக்குகள் பதிவாகின.

நேற்றைய போராட்டத்தில் கைதான ராகுலை கொண்டு சென்ற வாகனத்தின் டயர், காங்கிரஸாரால் பஞ்சராக்கப்பட்டது. இதனால், சிலமணி நேரம் டெல்லி போலீஸார் திணற வேண்டியதாயிற்று.

ஒருகட்டத்தில் ராகுலும், பிரியங்காவும் தனித்தனியாக சாலைகளில் படுத்து அடம் பிடித்தனர். அவர்களை அகற்றுவதும் டெல்லி போலீஸாருக்கு தலைவலியானது.

வாகனத்தில் அமர்ந்திருந்த ராகுல், டெல்லி காவல்துறையின் ஒரு காவலருக்கு குடிநீர் பாட்டில் கொடுத்து உதவினார். இதுபோல், ராகுல், பிரியங்கா மீதான பல்வேறு சம்பவங்களை காங்கிரஸார் ரீல்ஸாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

டெல்லி காவல்துறை மற்றும் காங்கிரஸாரின் தள்ளுமுள்ளுவால் ராகுலின் ஒரு செருப்பு கூட்டத்தில் காணவில்லை. இதை பொருட்படுத்தாத ராகுல், தன் ஒரு காலில் மட்டும் செருப்புடன் போலீஸாருடன் நடந்து சென்றார். இந்த சம்பவமும் காங்கிரஸரால் ரீல்களாக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர், பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ் ஜனநாயக நிறுவனங்களும் அரசியலமைப்பு விழுமியங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here