‘மூடர் கூடம் 2’ படத்தில் ஆச்சரியப்படுத்​தும் கதை: இயக்குநர் உறுதி

0
25

நவீன் இயக்​கி, நடித்து 2013-ம் ஆண்டு வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற படம், ‘மூடர் கூடம்’. வித்​தி​யாச​மான நகைச்​சுவை, விநோத​மான கதா​பாத்​திரங்​கள் மூலம் கவனிக்​கப்​பட்ட இப்​படத்​தின் அடுத்த பாகம் இப்​போது உரு​வாகி​யுள்​ளது. முதல் பாகத்தை இயக்​கிய நவீன் ஹித​யத் எழுதி இயக்​கி, நடித்​துள்​ளார்.

இதில், ஓவி​யா, சென்​ராயன், ராஜாஜி, குபேரன், ஜெயப்​பிர​காஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். சூரஜ் நல்​லு​சாமி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். அம்​ரீஷ் இசையமைத் துள்ள இந்​தப் படத்​துக்​கு, நடராஜன் சங்​கரன் பின்​னணி இசையமைத்​துள்​ளார். இதன் முதல் தோற்​ற போஸ்​டர் வெளி​யாகி​யுள்​ளது.

படம்​பற்றி நவீன் ஹித​யத் கூறும்​போது, “மூடர் கூடம் என் மனதுக்கு மிக​வும் நெருக்​க​மான திரைப்​படம். பல ஆண்டு​களாக, இந்​தப் படத்​தின் 2-ம் பாகம் எப்​போது வெளி​யாகும் என்று ரசிகர்​கள் கேட்டு வந்​தனர். அதற்​காக ரசிகர்​களை ஆச்​சரியப்​படுத்​தும் கதையைத் தேடிக்​கொண்​டிருந்​தேன். ‘மூடர் கூடம் 2: மிஷன் பாசிபிள்’ அந்​தக் கதை​யாக அமைந்​தது.

ரசிகர்​கள் விரும்​பிய நகைச்​சுவையைத் தக்​க​வைத்​துக்​கொண்​டு, கதா​பாத்​திரங்​களை​யும், கதை சொல்​லலை​யும் இன்​னும் பெரிய அளவுக்​குக் கொண்டு சென்​றுள்​ளோம்” என்​றார். படத்தை கிராண்​டல் பிக்​சர்ஸ் சார்​பில் கமல் போஹ்​ரா, சம்​கித் போஹ்ரா தயாரித்​து உள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here