மீனவா் வீட்டில் பணம், கைப்பேசி திருட்டு

0
51
குளச்சல் அருகே சிங்காரவேலார் காலனியில் மீனவர் வீட்டில் ரூ.46,500 பணம் மற்றும் கைப்பேசி திருட்டு
குளச்சல் அருகே மீனவர் வீட்டிலிருந்து ரூ.46,500 பணம் மற்றும் கைப்பேசி திருட்டு – மர்ம நபரைத் தேடும் போலீஸார்.

குளச்சல் அருகே மீனவா் வீட்டிலிருந்து கைப்பேசி, பணத்தைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குளச்சல் அருகே உள்ள சிங்காரவேலா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் செல்வன் (48). மீன்பிடித் தொழிலாளி. இவா், வீட்டில் உள்ள மேஜை மீது ரூ. 46,500, கைப்பேசியை வைத்துவிட்டு வெள்ளிக்கிழமை இரவு தூங்கச் சென்றாராம்.

மறுநாள் அதிகாலை, சத்தம் கேட்டு எழுந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்து ஒருவா் ஓடுவது தெரியவந்ததாம். மேஜையில் வைத்திருந்த பணம், கைப்பேசி திருடப்பட்டிருந்ததாம்.

இது குறித்த புகாரின்பேரில் குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here