திங்கள்சந்தை: மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்

0
279

நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் கேரளா மாநிலம் மூணார் பகுதிக்கு பஸ்சில் சுற்றுலா சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திங்கள்சந்தை அடுத்த மாங்குழி பகுதியை சேர்ந்த ஆதிகா (19), அஞ்சுகிராமம் வேணிகா (19), நெல்லை மாவட்டம் ஏர்வாடி சேர்ந்த சுதன் (19) என்ற மாணவர்கள் மூன்று பேர் பலியானார்கள். 

இதையடுத்து குமரி மாணவிகள் 2 பேரின் உடல்களும் நேற்று முன்தினம் (பிப்ரவரி 20) சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து திங்கள்சந்தை மாணவி ஆதிகாவின் உடல் நேற்று காலையில் நாகர்கோவில் உள்ள மின்மாயனத்தில் உறவினர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது. 

இதையடுத்து ஆதிகாவின் வீட்டிற்கு மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று (பிப்ரவரி 21) சென்றார். அங்கு ஆதிகாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பின்னர் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here