Home மாநில செய்திகள் சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

0

சென்​னை​யில் 11 இடங்​களில் நவீன குளிரூட்​டப்​பட்ட பேருந்து நிறுத்​தங்​கள் அமைப்​ப​தற்​காக மாநக​ராட்சி – பெருநிறு​வனங்​கள் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது.

சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​களின் ஒரு பகு​தி​யாக, பொது ​மக்​கள் மற்​றும் பயணி​களின் வசதிக்​காக பாது​காப்​புடன் கூடிய அதிநவீன குளிரூட்​டப்​பட்ட (ஏசி) பேருந்து நிறுத்​தங்​கள் அமைக்​கப்பட உள்​ளன.

முதல்​கட்​ட​மாக பெருநிறு​வனங்​களின் சமூகப் பங்​களிப்பு (சிஎஸ்​ஆர்) நிதி​யின் கீழ் நகரின் 11 முக்​கிய இடங்​களில் இந்த நவீனப் பேருந்து நிறுத்​தங்​களை அமைக்க சென்னை மாநக​ராட்சி திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி அண்​ணா​சாலை டிஎம்​எஸ், மயி​லாப்​பூர் பேருந்து நிறுத்​தம், வடபழனி ஜவஹர்​லால் நேரு சாலை, வேளச்​சேரி விஜயநகர் பேருந்து முனை​யம், வடபழனி சிம்ஸ் மருத்​து​வ​மனைக்கு வரும் வழி மற்​றும் செல்​லும் வழி, கிண்டி சின்​னமலை, ஆற்​காடு சாலை ஆவிச்சி பள்​ளி, ஆலந்​தூர் மெட்​ரோ, எழும்​பூர் வடக்​கு, எழும்​பூர் தெற்கு ஆகிய 11 இடங்​கள் இதற்​காகத் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.

இத்​திட்​டத்​துக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள், சென்னை ரிப்​பன் மாளிகை அலு​வலக கூட்​டரங்​கில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன், காவல் ஆணை​யர் அமல்​ராஜ் ஆகியோர் முன்​னிலை​யில் பங்​களிப்​பாளர்​களு​டன் கையெழுத்​தாகின.

இந்​தப் புதிய பேருந்து நிறுத்​தங்​களில் பயணி​களின் வசதிக்​காக குளிரூட்​டப்​பட்ட காத்​திருப்பு அறை, 24 மணி நேர சிசிடிவி கண்​காணிப்பு கேம​ராக்​கள், இலவச வைஃபை வசதி, மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான சாய்வு தளப்​பாதை, பேருந்து வழித்தட வழி​காட்​டித் திரைகள், உயர்தர மின்​விளக்​கு​கள், வெப்​பத்​தைத் தாங்​கும் கூரை, பலமான பாது​காப்​புக் கண்​ணாடி மற்​றும் செல்​போன் யுஎஸ்பி சார்​ஜிங் பாயின்ட்​கள் உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் இடம்​பெறவுள்​ளன.

இந்​த நிகழ்​வில் சென்னை போக்​கு​வரத்​துக் கூடு​தல் காவல் ஆணை​யர் பா.​சாமூண்​டீஸ்​வரி, இணை ஆணை​யர் செ.சர​வணன், தலை​மைப் பொறி​யாளர் பி.சங்​கர​வேலு, கண்​காணிப்​புப் பொறி​யாளர் எம்​.பழனி உள்​ளிட்ட உயர் அதி​காரி​கள் பங்​கேற்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version