Home மாநில செய்திகள் ரூ.100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு

ரூ.100 கோடி மோசடி வழக்கில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனு

0

ரூ.100 கோடி மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநில பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போலீஸார் பதிலளிக்க உத்தரவு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீஸார் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு போலீஸார் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version