Home தேசிய செய்திகள் அயோத்தி ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு மியாசாகி மாம்பழம் படையல்

அயோத்தி ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பு மியாசாகி மாம்பழம் படையல்

0

அயோத்​தி​யில் எழுந்​தருளி​யுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்​பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்​பட்​டது.

ஜப்​பானின் கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ வகை​யாகக் கருதப்​படு​கின்​றன. சர்​வ​தேசச் சந்​தை​யில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3.5 வரை லட்​சம் வரை விற்​பனை​யாகிறது.

இந்த வகை மாம்​பழங்​கள் பழுக்​கும் போது, வழக்​க​மான மாம்பழங்​களைப் போல மஞ்​சள் நிற​மாக மாறாமல், அடர் ஊதா அல்லது ரூபி-சிவப்பு நிறத்​தைப் பெறுகின்​றன. மேலும், ஜப்​பான் மக்கள் இதனைப் பாசத்​துடன் ‘சூரியனின் முட்​டை’ (Taiyo-no-Tamago / Egg of the Sun) என்​றும் அழைக்​கின்​றனர்.

இந்த வகை மாம்​பழங்​கள் திறந்​தவெளி​யில் பயி​ரிடப்​ப​டா​மல், வெப்​பநிலை மற்​றும் சூரிய ஒளி கட்​டுப்​படுத்​தப்​பட்ட நவீன கண்ணாடி பசுமைக் குடில்​களில் மட்​டுமே வளர்க்​கப்​படு​கின்​றன. மேலும், ஜப்​பானிய வேளாண் அமைப்​பு​களின் கடுமை​யான தரக்​கட்​டுப்​பாட்​டின்​படி, ஒவ்​வொரு பழமும் குறைந்​த​பட்​சம் 350 கிராம் எடை​யும், 15 சதவீதத்​துக்​கும் அதி​க​மான சர்க்​கரை அளவும் கொண்​டிருந்​தால் மட்​டுமே ‘மி​யா​சாகி’ என்ற பெயரில் சந்​தைப்​படுத்த அனு​ம​திக்​கப்​படு​கின்​றன.

இந்​நிலை​யில் உத்​தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் அமைந்துள்ள ராமருக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பிலான மியா​சாகி மாம்பழம் முதன்​முறை​யாக படைக்​கப்​பட்​டுள்​ளது. நேற்று முன்தினம் ராமருக்கு துளசி இலை​யுடன் இந்த வகை மியாசாகிபழம் படைக்​கப்​பட்​டது. ஒரு மாம்​பழத்​தின் விலை தற்போது ரூ.1 லட்​சமாகும்.

இவை அயோத்​தி​யிலுள்ள பிரத்​யேக தோட்​டத்​தில் விளைந்தவையாகும். ஓம்​பிர​காஷ் சிங் என்​பவரது தோட்​டத்​தில் விளைந்த இப்பழம் ராமருக்கு படைக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து ஓம்​பிர​காஷ் சிங் கூறும்​போது, “இந்த மாம்பழங்கள் மிக​வும் விலை உயர்ந்​தவை​யாகும். மற்ற மாம்​பழங்​களின் சுவையைக் காட்​டிலும் இது கூடு​தல் சுவை மிக்​கது. அதிக நார்ச்​சத்​தும், வைட்​ட​மின் சத்​துகளும் கொண்​டது.

அயோத்​தி​யில் உள்ள தட்​பவெப்ப நிலைக்கு இந்த வகை மியாசாகி பழங்​கள் சிறப்​பாக விளை​கின்​றன. இந்த ஆண்டு 150 கிராம் எடை முதல் 300 கிராம் எடை வரையி​லான 12 மியா​சாகி மாம்​பழங்​கள் மரத்​தில் விளைந்​தன. முதல் மாம்​பழத்தை அயோத்தி ராமருக்கு படைத்​தேன்’’ என்​றார்.

கோயில் அறக்​கட்​டளை நிர்​வாகி மகந்த் சீதா​ராம் தாஸ் ஜி மகராஜ் கூறும்​போது, “இந்த வகை மாம்​பழம் கனிகளின் அரசன் என்று அழைக்​கப்​படு​கிறது. ஓம் பிர​காஷ் தோட்​டத்​தில் விளைந்த மியா​சாகி பழங்​கள் படைக்​கப்​பட்​டதை இன்று பார்த்​தேன். இந்த மாம்​பழத்​தின் நிறம் பிரபஞ்​சத்​துக்​கு ஒளியூட்​டும்​ சூரிய பகவானின்​ நிறத்​தை ஒத்​திருக்​கிறது’’ என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version