Home தேசிய செய்திகள் தெலங்கானா அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை – ரூ.32 லட்சம் ரொக்கம், 1...

தெலங்கானா அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை – ரூ.32 லட்சம் ரொக்கம், 1 கிலோ தங்கம் பறிமுதல்

0

தெலங்​கானா மாநிலம் ஹைத​ரா​பாத்​தில் நிலம் மற்​றும் சர்வே துறை இணை இயக்​குந​ராக பணி​யாற்றி வந்​தவர் எஸ்​.நரஹரி. இவர் வரு​மானத்​துக்கு பொருந்​தாத வகை​யில் சொத்துகளை குவித்​துள்​ள​தாக புகார் எழுந்​தது.

இதன் அடிப்​படை​யில் ஹைத​ரா​பாத்​தில் அவர் வசிக்​கும் வீடு, அலு​வல​கம் மற்​றும் நண்​பர்​கள், உறவினர்​களின் வீடு​கள் என மொத்​தம் 11 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​கள் நேற்று அதிரடி சோதனை நடத்​தினர்.

இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் ​துறை டிஎஸ்பி ஸ்ரீதர் கூறுகை​யில், ‘‘நரஹரி வீட்​டின் படுக்கை அறை​யில் மெத்​தைக்​கடி​யில் ரூ.32 லட்​ச​மும், பீரோ​வின் மேல் பகு​தி​யில் கட்​டுக்​கட்​டாக பணமும் சிக்கியது. மேலும் இந்த சோதனை​யில் ரூ.1 கோடிக்கு வங்கி டெபாசிட், வீடு, நிலப் பத்​திரங்​கள், 1 கிலோ தங்​க​மும் சிக்​கின.

ரூ.1.54 கோடி பணம் ஆங்​காங்கே பத்​திரப்​படுத்​தப்​பட்டு இருந்​தது. மேலும் 2 வங்கி லாக்​கர்​களை திறந்து சோதனை​யிட அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது. நரஹரியை கைது செய்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version