அருண் விஜய்க்கு நாயகியான மிர்ணா

0
25

அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார்.

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.

இப்படத்தினை முடித்துவிட்டு அருண் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here