Home மாநில செய்திகள் மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக – கர்நாடக எல்லையில் ஜூலை 15-ம் தேதி போராட்டம்

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக – கர்நாடக எல்லையில் ஜூலை 15-ம் தேதி போராட்டம்

0

மேகேதாட்டு அணை விவ​காரம் தொடர்​பாக, தமிழகம் மற்​றும் கர்​நாடக மாநில எல்​லை​யில் ஜூலை 15-ம் தேதி இருதரப்​பினரும் போராட்​டங்​களை அறி​வித்​துள்​ள​தால், எல்​லைப் பகு​தி​களில் பாது​காப்பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

காவிரி ஆற்​றின் குறுக்கே மேகேதாட்​டில் அணை கட்ட கர்​நாடக அரசு நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, தமிழக விவ​சா​யிகள் பல்​வேறு கட்​டப் போராட்​டங்​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒருபகு​தி​யாக, கர்​நாடக அரசை கண்​டித்​து, ஜூலை 15-ம் தேதி தமிழக விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் ஓசூர் அருகே தமிழக எல்​லை​யில் இருந்து மேக​தாட்டு வரை பேரணி நடத்​தப்​படும் என, சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் வேலு​சாமி அறி​வித்​துள்​ளார்.

இதற்​கிடை​யில், அதே நாளில் கர்நாடக மாநில எல்​லைப் பகு​தி​யில், மேகேதாட்​டில் அணை கட்ட வலி​யுறுத்​தி​யும், தமிழ் திரைப்​படங்​களை திரை​யிட எதிர்ப்பு தெரி​வித்​தும் முழு கடையடைப்பு போராட்​டம் நடத்​தப்​படும் என கன்னட சலு​வாலி அமைப்​பின் தலை​வர் வாட்​டாள் நாக​ராஜ் அறி​வித்​துள்​ளார்.

ஒரே நாளில் இரு மாநிலங்​களின் எல்​லைப் பகு​தி​களி​லும் அந்நதந்த மாநில அமைப்புகள் போராட்​டங்​களை அறிவித்துள்ளதால், அங்கு கூடு​தல் போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்யப்பட்டு வரு​கின்​றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version