Home மாநில செய்திகள் சென்னை அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு

சென்னை அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு

0

சென்னை எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்துவமனையில் முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதல்​வரை நேரில் பார்த்த மருத்​து​வர்​கள், செவிலியர்​கள், சிகிச்சை பெறும் தாய்​மார்​கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் நேற்று தமிழக முதல்​வர் விஜய் திடீர் ஆய்வு மேற்​கொண்​டார். சுகாதாரத்துறை அமைச்​சர் அருண்​ராஜ், செயலர் தாரேஸ் அகமது உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். மருத்​து​வ​மனைக்​குள் சென்ற முதல்​வர், பல்​வேறு வார்​டு​களை பார்​வை​யிட்​டார்.

பிரசவத்​துக்​காக காத்​திருக்​கும் பெண்​கள், பிரச​வித்த தாய்​மார்​களை சந்தித்து முதல்​வர் பேசி​னார். அவர்​களிடம் மருத்​துவ சேவை​களில் இருக்​கும் நிறை மற்​றும் குறை​களை முதல்​வர் கேட்​டறிந்​தார். அப்​போது, பிறந்து சில நாட்​களே ஆன குழந்​தைகளை முதல்​வர் தனது கைகளில் ஏந்தி கொஞ்​சி​னார். இதனை பார்த்த அங்​கிருந்த பெண்​கள், தாய்​மார்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். ‘சிஎம் சார்’ எனவும், ‘அண்ணா’ என்​றும் அவர்​கள் உற்​சாக​மாக குரல் எழுப்​பினர்.

பின்​னர், மருத்​து​வ​மனை இயக்​குநரின் அறைக்கு சென்று பார்வை​யாளர்​கள் அமரும் இடத்​தில் அமர்ந்த முதல்​வர், மருத்துவமனை​யின் செயல்​பாடு​கள், சிகிச்சை விவரங்​கள், வசதி​கள், கட்​டமைப்பை மருத்​து​வர் குப்​புலட்​சுமி​யிடம் கேட்​டறிந்​தார். ஏழை மக்​களுக்கு தரமான மருத்​துவ சேவை வழங்​கு​வதற்​கு, மருத்​து​வ​மனைக்கு தேவை​யான அனைத்​தும் செய்து கொடுக்​கப்​படும் என முதல்​வர் உறுதி அளித்​தார். தொடர்ந்​து, மருத்​து​வ​மனை​யில் செயல்​படும் செயற்கை கருத்​தரிப்பு மையம் மூலம் பிறந்த இரட்டை குழந்​தைகள் பற்றி விசா​ரித்​தார். தீவிர சிகிச்சை பிரி​வில் குழந்​தைகள் இருப்​ப​தால், பாது​காப்பு கருதி அங்கு செல்​வதை முதல்​வர் தவிர்த்​தார். முதல்​வர் வந்து ஆய்வு முடிந்து விட்டு செல்​லும் வரையி​லான சுமார் ஒரு மணி நேரம் மருத்​து​வ​மனை முழு​வதும் மிக​வும் பரபரப்​பாக இருந்​தது.

இதுதொடர்​பாக மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் குப்​புலட்​சுமி கூறுகை​யில், “முதல்​வர் விஜய் வரு​வ​தாக முன்​கூட்​டியே எந்த தகவலும் இல்​லை. அவர் திடீரென மருத்​து​வ​மனைக்கு வந்​தது அனை​வருக்​கும் மிகப்​பெரிய ஆச்​சரி​யத்தை ஏற்​படுத்​தி​யது.

மருத்​து​வ​மனை​யில் அளிக்​கப்​படும் மருத்​துவ சேவை​களை பாராட்​டி, தொடர்ந்து சிறப்​பாக செயல்​படு​மாறு அறி​வுறுத்​தி​னார்” என்​றார்.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் கூறுகை​யில், “மருத்​து​வ​மனை​யில் யார் பணம் கேட்​டாலும் அவர்​கள் மீது உடனடி​யாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணி​யில் இருந்து நீக்க வேண்​டும் என்று முதல்​வர் உத்​தர​விட்​டுள்​ளார்” என்​றார்.

முதல்வர் பிறந்த மருத்​து​வ​மனை​

1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி எழும்​பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் பிறந்​தார். தனது பிறந்த நாளை பலமுறை இந்த மருத்​து​வ​மனை​யில் கொண்​டாடிய அவர், அங்கு பிறந்​த குழந்​தைகளுக்​கு மோதிரம்​ அணி​வித்​துள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version