
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து *மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்…
அப்போது, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை எவ்வித குறைபாடுமின்றி வழங்க வேண்டும் என்றும், உணவின் தரத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேயர் அவர்கள் எச்சரித்தார்.