Home கன்னியாகுமரி செய்திகள் கொட்டாரம்: ‎இளம் பெண் உயிரிழப்பு ஆத்திரத்தில் ‎வாலிபர் அடித்து கொலை

கொட்டாரம்: ‎இளம் பெண் உயிரிழப்பு ஆத்திரத்தில் ‎வாலிபர் அடித்து கொலை

0
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே பெரியவிளையில் இளம்பெண் ஏஞ்சல் மற்றும் இளைஞர் ஆண்டனி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாரம் அருகே பெரியவிளையில் இளம்பெண் மற்றும் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு. அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் இளம்பெண் மற்றும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‎குமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்த பெரியவிளையை சேர்ந்தவர் அழகேசன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மூத்த மகள் ஏஞ்சல். நாகர்கோவிலில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.

‎அதே பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி. இவர் ஏஞ்சலை காதலிக்க வற்புறுத்தித் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் கடந்த மே மாதம் ஆண்டனி கைது செய்யப்பட்டார்.

‎சிறையிலிருந்து வெளியே வந்த பின்னரும் தொந்தரவு தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான ஏஞ்சல் வீட்டில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

‎இதனால் ஆத்திரமடைந்த ஏஞ்சலின் உறவினர்கள், ஆண்டனியை தாக்கியதில் அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

‎அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பெரியவிளை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version