Home கன்னியாகுமரி செய்திகள் சுசீந்திரம் அருகே உயிரிழந்த 2 மாத ஆண் குழந்தையின் உடல் 20 நாட்களுக்குப் பிறகு தோண்டி...

சுசீந்திரம் அருகே உயிரிழந்த 2 மாத ஆண் குழந்தையின் உடல் 20 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம்

0
சுசீந்திரம் அருகே உயிரிழந்த 2 மாத ஆண் குழந்தையின் உடல் 20 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம்
சுசீந்திரம் அருகே குழந்தை மர்ம மரணம் – உடல் தோண்டி எடுப்பு

சுசீந்திரம் அருகே 2 மாத ஆண் குழந்தை மர்ம மரணம் – 20 நாட்களுக்குப் பிறகு உடல் தோண்டி எடுப்பு!

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ராமபுரம் லட்சுமிபுரம் பகுதியில் உயிரிழந்த 2 மாத ஆண் குழந்தையின் உடல், 20 நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீகிருஷ்ணன் என்பவரின் 2 மாத ஆண் குழந்தையான சூரிய ஸ்ரீ உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்துவதற்காகச் சென்ற கிராம சுகாதார செவிலியர் கரோலின், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து புதைக்கப்பட்டதாகத் தாயார் தெரிவித்ததையடுத்து சந்தேகமடைந்தார்.

இதுகுறித்து அவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version