மஞ்சாலுமூடு பகுதியை சேர்ந்த 2 குழந்தைகளின் தாயான இளம் பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குழித்துறையில் பஸ்சுக்காக நின்றார். அப்போது உடன் படித்த வாலிபர் காரில் வந்து, வீட்டில் கொண்டு விடுவதாக அழைத்து சென்றுள்ளார். ஆனால் வாலிபர் தனது வீட்டில் கொண்டு சென்று அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மீண்டும் அந்த வாலிபர் அந்த பெண்ணை போன் மூலம் மிரட்டியதால் நேற்று அந்த வாலிபரின் வீட்டில் சென்று அவர் மனைவியிடம் இளம்பெண் புகார் கூறினார். ஆனால் மனைவி மற்றும் உறவினர்கள் சேர்ந்து இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். குழித்துறை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.