மார்த்தாண்டம்: பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு

0
216

மார்த்தாண்டம் அருகே கோணங்காடு பகுதி சேர்ந்தவர் வின்சென்ட் (45). இவர் காஞ்சிர கோடு பகுதியில் பழைய வாகனங்களை பிரித்து விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 800 கிலோ எடை உடைய பழைய பேட்டரிகள், வாகனங்களை பிரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள், பேட்டரியால்  இயங்கும் வாகனங்களை பிரிக்க பயன்படுத்தும் மோட்டார் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.  

இன்று காலையில் பார்த்த போது திருட்டு நடந்தது தெரிய வந்தது.   இது குறித்து வின்சென்ட் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here