Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மார்த்தாண்டம்: பைக் விபத்தில் விவசாயி உயிரிழப்பு

0

மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). விவசாயியான இவர் சம்பவ தினம் தனது பைக்கில் பழையகடை என்ற பகுதியிலிருந்து மாமூட்டுகடை என்ற பகுதி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு பைக்கில் வந்த நெட்டியான்விளை சேர்ந்த ஹாரிஸ் (25) என்பவர் சாலையைக் கடக்க முயன்ற நேரம் இருவரின் பைக்குகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு தலையில் பரத்த காயம் ஏற்பட்டது. 

ஹாரிஸும் காயமடைந்தார். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். ஹாரிஸுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் (25) என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பைக்கை அஜாக்கிரதையாக ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்தியதாக ஹாரிஸ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version