மார்த்தாண்டம்: விவசாயி விஷம் குடித்து பலி

0
536

மார்த்தாண்டம் அருகே முழங்குழியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (50). விவசாயி. இவரது மனைவி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டார். இதனால் ராதாகிருஷ்ணன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று (6-ம் தேதி) ராதாகிருஷ்ணன் விஷம் குடித்து சாலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மகள் ராஜேஸ்வரி என்பவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here