மார்த்தாண்டம் அருகே நல்லூர் பி கிராமம் மலையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக மார்த்தாண்டம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் நேற்று குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தபோது, அங்கு ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் செம்மண் வெட்டி எடுத்து டெம்போவில் கடத்திக் கொண்டு இருப்பதை கண்டனர்.
இதையடுத்து ஹிட்டாச்சி எந்திரம் மற்றும் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஹிட்டாச்சி இயந்திர டிரைவர் தனேஷ் (41), உரிமையாளர் ஜெகன், டெம்போ டிரைவர் மற்றும் உரிமையாளர் என நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் தனேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.