மார்த்தாண்டம்: அதிகாலையில் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

0
155

ஆற்றூர் செம்பகதோப்பு விளையைச் சேர்ந்த சசி மகன் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வெட்டுவெந்நியில் தனது மனைவி வீட்டிலிருந்து பைக்கில் ஆற்றூர் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பயணம் ஜங்ஷனை கடந்ததும் ரோட்டின் செங்குத்தான உயரமான பகுதியில் செல்லும் போது எதிரே ஒரு வாகனம் வர ரோட்டின் இடது புறமாக மரத்தடியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின் பகுதியில் மீது மோதினார். இதில் ஜோ டேவிஸ் படுகாயம் அடைந்தார். உடனே குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் இறந்து போனார். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன் திருமணமாகி மனைவி தற்பொழுது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ரோசிலி கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவர் கோட்டயம் அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுதீஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here