மார்த்தாண்டம்: கடைக்குள் போதையில் மயங்கிய நகை தொழிலாளி

0
179

குழித்துறையை சேர்ந்தவர் தேசிங்குராஜா (55) இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். தேசிங்குராஜா மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் தனியார் காம்ப்ளக்ஸ்  முதல் மாடியில் நகை பட்டறை வைத்துள்ளார். பணி அதிகமாக இருக்கும் போது இரவு வேளையில் இந்த கடையில் தேசிங்குராஜா தூங்குவது வழக்கம். அப்போது தனது மனைவிக்கு தகவல் கொடுப்பதுண்டு.  

    நேற்று முன்தினம் இரவு தேசிங்குராஜா வீட்டுக்கு செல்லவில்லை. பட்டறைகுள் போதையில் மயங்கி விட்டார். மனைவி போன் செய்து பார்த்தும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை ஷட்டரை திறந்து வெளியே வந்த தேசிங்குராஜா மீண்டும் 11 மணியளவில் ஒரு கயிற்றுடன் கடை உள்ள சென்று பூட்டிக் கொண்டார்.

      இதை கண்ட பக்கத்து கடையினர் தற்கொலை முயற்சி செய்கிறார் என்று நினைத்து பதட்டமடைந்து உடனே மார்த்தாண்டம் போலீஸ் நிலையம் மற்றும் குழித்துறை தீயணைப்பு நிலையங்களுக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. கதவை உடைத்து தேசிங்குராஜாவை வெளியே மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் போதையில் மயங்கி விட்டதாக தெரிவித்தார். இருப்பினும் அவரது பதிலில் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here