குழித்துறை அருகே திருத்துவபுரம் ஆணைபுறக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜூ மகன் பைஜூ (21). சாப்ட்வேர் இன்ஜினியர். சம்பவத்தன்று இவர் தனது பைக்கை மார்த்தாண்டம் அருகே பம்பம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பைஜூ மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, மர்ம நபர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் பைக்கைத் திருடியதாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் (26) அதே பகுதி சுதீஜ் (20) ஆகிய இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.